என்னது உலக பாம்பு தினமா!
ஒவ்வொரு வருடமும் உலக பாம்பு தினமாக ஜூலை 16 அனுசரிக்கப் படுகிறது. புராணங்கள் படி பைபிள் மகாபாரதம் எகிப்திய புத்தகங்கள் என எல்லா மதத்திலும் பாம்புகள் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன.
என்னப்பா இது எல்லாத்துக்கும் ஒரு தின கொண்டாட்டங்களா!
அப்படின்னு பலர் கேக்கறது புரியுது. அப்படி ஏதாவது தினம் கொண்டாடியாச்சு நம்ம எல்லாரும் அறிவை விரிவு படுத்திக்கரோமானு பார்க்கலாம். இன்னிக்கி உலக பாம்பு தினத்தை முன்னிட்டு பாம்பு பத்தின சில தகவல்களை நம்ம எல்லாரும் தெரிஞ்சுக்கலாமா!
பாம்பு
உலகில் 3,500 வகையான பாம்புகள் இருக்கின்றன. அதில் 600 மட்டுமே விஷத்தன்மை உடையது. இருப்பினும் உலக சுகாதார அமைப்பு 200 வகையான பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை மிக்கவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘பார்படாஸ் த்ரெட்ஸ்னேக்’ என்பது தான் உலகிலேயே மிக சிறிய பாம்பு வகை. இது ஆன்டிகுவா மற்றும் பார்புடா தீவுகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வகையில் உள்ள வளர்ந்த பெரிய பாம்பே 10 சென்டிமீட்டர் அளவில் தான் இருக்குமாம்.
அதேபோல் உலகத்திலேயே மிக நீளமான பாம்பு வகை ‘ரெட்டிகுலேட்டட் பைதான்’. தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளில் இதனை காணலாம். 30 அடி நீளம் வரை இருக்கக்கூடும்.
உலகின் அதிவேக பாம்பும் ‘கருப்பு மாம்பா’ மணிக்கு 12.5 மைல் (அ) வினாடிக்கு 5.5 மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது. கொடிய வகை ஒன்றாகும். இந்த வகை பாம்பு கடித்தால் 30 நிமிடங்களுக்குள் அந்த மனிதன் இறந்துவிடுவான்.
அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்
பெரும்பாலான பாம்புகள் தங்கள் பார்வை, சுவை, கேட்டல் மற்றும் தொடுதல் போன்றவற்றைப் பயன்படுத்தி பதுங்கியிருக்கும் வேட்டையாடும்.
பாம்புகள் திறமையான வேட்டைக்காரர்கள், தங்கள் இரையை விரைவாகக் கொன்றுவிடும். உயிர்வாழத் தேவைக்கு மட்டுமே வேட்டையாடும் பழக்கம் கொண்டவை பாம்புகள்.
பாம்புகள் இரையை கடிக்காது அப்படியே விழுங்கிவிடும்.
மனிதர்கள் வளரும்போது சதையும் சேர்ந்து வளரும் ஆனால் பாம்புகளில் சதை உதிர்ந்து புது சதை உருவாகி வளரும். ஒரு வருடத்திற்கு மூன்றிலிருந்து ஆறு முறை சதை உதிர்ந்து பாம்புகள் வளர்கின்றன.
மனிதர்களுக்கு அச்சம் கொடுக்கும் பாம்புகளை விட மனிதர்களை தேனீக்கள் அதிகமாக கொல்கின்றன.
மீம்ஸ்
நமக்கு ஞாபகம் வச்சுக்கிறா மாதிரி ஈசியா சொல்லனும்னா நம்ம ஸ்நேக் பாபு வடிவேலுவ நினைவுபடுத்திக்கோங்க.