சினிமாவாழ்க்கை முறைவாழ்வியல்

ஜூலை 1 கொண்டாடுங்கள் உலக நகைச்சுவை தினம்

நம் இந்திய தேச அளவில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படும் அதே நாளில் உலக அளவில் நகைச்சுவை தினம் கொண்டாடப்படுகிறது.

1 ஜூலை, உலக நகைச்சுவை தினம் அமெரிக்காவில் தொடங்கிய ஒன்றாகும். நகைச்சுவை என்பது பல ஆண்டுகள் முதலே தொன்றுதொட்டு வருகிறது என தெரிகிறது.

நகைச்சுவை நடிகர்கள் நம்மை டன் நேரம் சிரிக்க வைக்கிறார்கள்.

மனிதன் சிரித்துக் கொண்டே வாழ்ந்தால் நோய் நொடிகள் அண்டாது என்று சொல்வார்கள் பெரியோர்கள். சிரிக்காமல் கடுகடுவென முகத்தை வைத்துக் கொள்ளும் போது நம் முகத்தை நம்மாலேயே கண்ணாடியில் பார்ப்பது கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கும்.

இன்றைய வேகமான வாழ்க்கையில் சிரிப்பு வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருப்பதைவிட சிரிப்பை ஒரு உடற்பயிற்சியாக கொண்டுள்ளனர். விடியற்காலையில் எழுந்து ஷூ மாட்டிக்கொண்டு 45 நிமிடம் ஓட்டம் 15 நிமிடம் உடற்பயிற்சி அதில் 10 நிமிடம் வாய் விட்டு சிரிப்பது என பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஏனென்றால் அந்த முழு நாளில் அதன் பிறகு அவர்களுக்கு சிரிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.

சிரிப்பு இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?

நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நம்முடன் வாழும் ஒவ்வொரும் நம்மால் சிரித்தவர்களும் நம்மை சிரிக்க வைத்தவர்களும் இன்று நினைவூட்டி நன்றி தெரிவிப்போம். நகைச்சுவைக்கு முக்கியப் பங்கு வகிக்கும் திரையுலக நகைச்சுவை நாயகர்களுக்கு இந்த நாளில் நாம் நன்றிகளை சமர்ப்பிப்போம்.

தமிழ்த் திரையுலகில் வெள்ளை கருப்பு படங்கள் காட்சிக்கு வர தொடங்கிய முதல் இன்று வரை நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் குடிகொண்ட நாயகர்களின் பட்டியல் இதோ

என். எஸ் கிருஸ்ணன், ரி. எ. மதுரம், ரி. ஆர் ராமச்சந்திரன், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா, தாமு, கோவை சரளா, மனோரமா,பாண்டு, பயில்வான் ரங்கநாதன், சார்லி, வ்ய். ஜி. மகேந்திரன், மயில்சாமி, விவேக், வடிவேலு, பார்த்திபன், பாண்டியராஜன், கவுண்டமணி, செந்தில், சத்யராஜ், கமலஹாசன், பாக்யராஜ், எஸ். வி. சேகர், கிரேசி மோகன், ஜனகராஜ், லூஸ் மோகன், வி. கே. ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, நாகேஷ், சிவகார்த்திகேயன், சூரி, கருணாகரன், சதீஷ், சந்தானம், மதுமிதா, வித்யுலேகா, ஆர்த்தி கணேஷ், மொட்ட ராஜேந்திரன், கஞ்சா கருப்பு, யோகி பாபு, பாஸ்கர், ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, சிங்கம் புலி, ஆர் ஜே பாலாஜி மற்றும் பல சின்னத்திரை நாயகர்கள்

இந்தப் பட்டியலில் நகைச்சுவை நாயகர்களின் பெயர் மிஸ் ஆகினால் கமெண்டில் தெரிவிக்கவும்.

ஹாப்பி ஜோக்ஸ் டே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *