ஆன்மிகம்ஆலோசனை

சந்திரனின் சாபம் தீர்த்த சோமநாதர்

ஸௌராஷ்ட்ரே ஸோமநாதம் ச ஸ்ரீசைலே மல்லிகார்ஜுநம் |
உஜ்ஜயிந்யாம் மஹாகாலமோங்காரே பரமேஷ்வரம் ||
கேதாரம் ஹிமவத்ப்ருஷ்டே டாகிந்யாம் பீமசங்கரம் |
வாராணஸ்யாம் ச விஷ்வேசம் த்ர்யம்பகம் கௌதமீதடே ||
வைத்யநாதம் சிதாபூமௌ நாகேசம் தாருகாவநே |
ஸேதுபந்தே ச ராமேஸம் குஷ்மேஸம் து சிவாலயே ||

என்று சிவ மஹாபுராணம் கூற முதல் ஜோதிர்லிங்கமான சோமநாத்தை பற்றி காண்போமாக.

எங்கே சோம்நாத்!

சோமநாத்திற்கு அருகில் டியு, அஹமதாபாத், ராஜ்கோட் ஆகிய ஊர்களில் விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில் எந்த இடத்தை சேர்ந்தாலும் ரயிலிலோ பேருந்திலிலோ சாலை வழியாக சோமநாத்தை அடையலாம்.

மூலவர்: சோமநாதர்

ஸ்தல வரலாறு

பிரம்ம தேவரின் மகனாக தக்ஷ பிராஜாபதிக்கு 60 மகள்கள் அதில் 27 மகள்களை சந்திரனுக்கு திருமணம் முடித்து கொடுத்தார் தக்ஷன். அவர்களே பிற்காலத்தில் இருப்பெத்தெழு நட்சத்திரங்களாக ஆகினர்.

காலம் ஓடிற்று விதி தன் விளையாட்டை தொடங்கிற்று. சிறிது காலம் இன்பமான திருமண வாழ்விலிருந்த சந்திரனுக்கு கார்த்திகை, ரோகிணி ஆகிய இருவரும் மீது மட்டும் அதீத பாசமும் அன்பும் காட்டுவதும் மற்றவர்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதுமாக மாறினான்.

தக்ஷன் சந்திரனை அழைத்து அறிவுரை வழங்கினார். அவரும் ஒப்புக்கொள்வது போல் அங்கு தலையசைத்து விட்டு பின்பு முன்பு போல் இருவரை மட்டும் நேசித்து வாழ்ந்து வந்தார். தன் அறிவுரையை மதிக்காமல் அலட்சியப்படுத்திய சந்திரனின் பால் கோபமடைந்த தக்ஷன் ‘தொழு நோய் ஏற்படட்டும்’ என்று சாபமிட்டார்.

நோய் பற்றிய திங்களின் ஒளி குறைய தொடங்கியது. தேவ மருத்துவர்கள், அஸ்வினி குமாரர்கள், தன்வந்திரி என எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாமல் நாளுக்கு நாள் தேய்ந்துக்கொண்டே போகலாயிற்று.

சந்திரனின் அழியும் கலைகளை கண்டு பிரம்ம தேவர் “பூவுலகில் ஸரஸ்வதி நதி சங்கமத்திலுள்ள பிரபாசம் என்றும் தலத்திற்கு சென்று; பொய்கையை உருவாக்கி அதில் மற்ற நன்னீர்களை ஆவாகித்து, மணலால் லிங்கம் அமைத்து, இறப்பை நீக்கவல்ல சிவபெருமானின் மிருத்யுஞ்சய மந்திரத்தை பல கோடி முறை உச்சாடனம் செய் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்” என ஆலோசனை கொடுத்தார்.

சந்திரனின் தவப்பலனாக எம்பிரான் காட்சியளாத்து “சாபத்தால் ஏற்பட்ட நோய் முழுமையாக நீக்க முடியாது; பதினைந்து நாட்கள் தேய்ந்தும், பின் மூன்றாம் நாள் வரும் பிறையை என் முடியில் சூடிய பின் வளருவாயாக” என சாபத்திற்கு தீர்வளித்தார். அதுவே தேய்பிறை வளர்பிறையின் காரணம்.

மேலும் படிக்க : பங்குனி உத்திர விரத கடைப்பிடியுங்க நினைத்தெல்லாம் நிறைவேறும்!

“எம்பெருமான் சந்திரனுக்கு வரமளித்த இந்த இடத்தில் தாங்கள் லிங்கத்தில் எழுந்தருளி அனைவருக்கும் அருள்பாளிக்க வேண்டும்” என்று தேவர்களும் முனிவர்களும் வேண்டினர். கருணாமூர்த்தி அவர்களின் வேண்டுதலுக்கிணங்க அங்கு வசிக்க அது சோமநாத் (அ) சோமநாதபுரம் ஆயிற்று.

சோமநாதபுரத்தின் பெருமை

சோமநாதபுரத்து கடற்கரையில் இன்றும் திங்களின் ஒளி மிகுந்த பிரகாசத்துடன் காட்சியளிக்குறது. அதோடு ஞாயிற்றின் ஒளியும் பிரகாசமளிக்கும்.

ஆறு திங்கள் அதில் நீராடி சிவ பூஜை செய்தால் மஹாபாவங்களும் நோயும் தீரும் என சிவபுராணம் கூறுகிறது. மற்றொரு புராணம் இத்தலத்தை சுற்றினால் உலகத்தை சுற்றியது போன்றது என கூறுகிறது.

கண்ணபிரானின் வாழ்வில் மிகவும் முக்கியமான மூன்று நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளன.அவரின் காலில் வேடன் அம்பு பாய்த இடம். அவரின் உயிர் பிறந்த சடலம் அர்ஜூனனால் கண்டெடுக்கப்பட்ட இடம். அவரின் சடலத்தை தகனம் செய்த இடம்.

சந்திரன் நீராடிய தடாகம் சந்திர குண்டம் என்று அழைக்கப்படுகிறது.

இரண்யா நதி, கபில நதி, ஸரஸ்வதி நதி ஆகிய மூன்றும் சங்கமித்து திரிவேணி சங்கமமாக இங்குள்ளது.

அனைவரும் புண்ணிய நீரில் நீராடி சோமநாதரின் அருளை பெருவோமாக.

மேலும் படிக்க : கலையாத கல்வியும்-அபிராமி பட்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *