காவல்துறையில் வேலை வாய்ப்பு..! விண்ணப்பிக்க ரெடியா..?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2022ம் ஆண்டுக்கான 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இன்று முதல் (8-3-22) விண்னபிக்கலாம் என தெரிவித்துள்ளது. விண்னப்பிக்க 7.4.22 கடைசி நாள் என்பதால் விரைவில் விண்ணப்பிப்பது நல்லது.
கல்வி தகுதி:-குறைந்த பட்சம் எதாவது ஒரு இளங்கலை பட்டம்
வயது:- குறைந்த பட்சம் 20 அதிகபட்சம் 30, (வயது மாற்றத்தகுந்தது)
கூடுதல் விவரங்களுக்கு http://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.