காவல்த்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் போன்ற காலி பணியிடங்களை நேர அறிக்கையினை அரசு வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தில் காவலர் பணி வாய்ப்பு பெறும் கனவு கொண்டவரா நீங்கள் உங்களுக்கான இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 906 ஆகும். செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 ஆம் தேதிவரை தமிழகத்தின் காவல்துறை பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்ட அறிக்கையில் சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக இருக்கின்ற 22 பணியிடங்கள் சேர்த்து விண்ணப்பங்களும் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் பொது தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பத்தில் கூறியுள்ளபடி விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைப்பு செய்து விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்து 906 பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
காவல்துறை இரண்டாம் காவலர் நிலை சிறைத்துறை, இரண்டாம் நிலை சிறைக் காவலர் 119 பணியிடங்கள்
தீயணைப்பு மற்றும் மீட்பு 456 பணிகள், 22 பின்னடைவு காலிப் பணியிடங்கள், இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காவலர் பணியிடங்களுக்கு மாத சம்பளமாக 18 ஆயிரத்து 600 முதல் 52 ஆயிரத்து 900 வரை பெறலாம் .மேலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வுக்காக கல்வி தகுதியாகப் பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக காவல்துறை பணிக்குத் தகுதியானவர்கள் எழுத்து மற்றும் உடல்திறன் போட்டிகளின்போது தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
எழுத்து தேர்வில் 80 மதிப்பெண்கள் பொது அறிவு மற்றும் உளவியல் பாடத்திலும் பெற்றிருக்க வேண்டும். உடல்கூறு தேர்வில் சரியான உடல் அளவு இருக்க வேண்டும். உடல்தகுதி தேர்வில் 15 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தேசிய மாணவர் படை சேர்ந்தவர்களுக்கு 5 மதிப்பெண்கள், என்சிசி மாணவர்களுக்கு இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றது. என்எஸ்எஸில் பங்கு கொண்டவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றது.
அதிகாரப்பூர்வ தளத்தில் இணைப்பினை இங்குக் கொடுத்திருக்கின்றோம். அதனை விருப்பமுள்ளோர் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வானது டிசம்பர் 13 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும். அதிகாரப்பூர்வ லிங்கினை பெற இங்கே http://www.tnusrb.tn.gov.in/about_us.htm கிளிக் செய்யவும்.