SBI SO வேலைவாய்ப்பு
மத்திய அரசாங்கத்தின் உட்பட்டு செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் முக்கியமானது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்ப படுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. SBI SO மொத்தம் 64 பணியிடங்கள்.

வங்கி வேலை என்றால் சும்மாவா உட்கார்ந்த இடத்தில் அசத்தலான ஊதியம் பெறுவதற்கு வங்கி வேலை உகந்த வேலை.
கல்வி தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு சமமானவை ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப் படிப்போ அல்லது முதுகலை பட்டப் படிப்போ முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள இணைப்பை பார்க்கவும்.
வயது வரம்பு
SBI SO பணியிடத்திற்கு 25-50 வயதுடைவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு ஏற்றவாறு வயது வரம்பு மாறுகிறது மேலே விவரங்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணி தெரிந்து கொள்ளுங்கள். இது பொதுவான தகவல் அவரவர் பிரிவிற்கு ஏற்றவாறு சலுகைகள் உண்டு.
விண்ணப்ப கட்டணம்
SBI SO பணிக்கு விண்ணப்பிக்க ₹750 பொது விண்ணப்பக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது திரும்பப் பெறமுடியாத கட்டணமாக பெற்றுக் கொள்ளப்படுகிறது. பிரிவினருக்கு ஏற்றவாறு சலுகைகள் உண்டு.
முக்கியமான தேதிகள்
விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 26-06-2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-07-2020
கட்டணம் செலுத்த கடைசி தேதி: 13-07-2020

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முன்னணி வங்கியான இது பல வங்கி பணியாளர்களுக்கு கனவாக அமைந்திருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு பற்றி மேலும் விபரங்கள் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://bank.sbi/careers (அ)
https://www.sbi.co.in/careers.
விண்ணப்பிக்கும் அனைவரும் நினைவில் வைக்க வேண்டிய தேதி 13-07-2020.
“நன்றே செய் அதை இன்றே செய்”
ஃப்ரீயா இருக்கீங்களா இப்போவே அப்ளிகேஷனை போடுங்க.