சிலேட்குச்சி வீடியோஸ்வேலைவாய்ப்புகள்

எட்டாம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு ரூ.52,400/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!

16.04.2022 அன்று அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் வெளியிட்ட அறிவிப்பில் அலுவலக உதவியாளர், உதவி மின் பணியாளர், இரவு காவலர், கால்நடை பராமரிப்பு ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, சம்பளம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம்Arulmigu Parthasarathy Swamy Temple (APST)
பணியின் பெயர்Office Assistant, Night Watchman, Electrical Helper, Animal CareTaker and others
பணியிடங்கள்11
விண்ணப்பிக்க கடைசி தேதி20.05.2022
விண்ணப்பிக்கும் முறைOffline
அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் பணியிடங்கள்:

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • உதவி மின் பணியாளர் – 01
  • அலுவலக உதவியாளர் – 01
  • கடை நிலை ஊழியர் – 02
  • திருவிலகு – 02
  • இரவு காவலர் – 01
  • உதவி கைங்கர்யம் – 01
  • சன்னதி தீவட்டி – 01
  • உதவி பரிச்சாரகர் – 01
  • கால்நடை பராமரிப்பு – 01
APST கல்வி விவரங்கள்:
  • உதவி மின் பணியாளர் பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Electrical / Wireman பாடப்பிரிவுகளில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அலுவலக உதவியாளர், கடை நிலை ஊழியர் பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மற்ற பணிகளுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
APST வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.04.2022 அன்றைய நாளின் படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

APST சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.52,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் தேர்வு முறை:

விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ இணைப்பின் மூலம் அல்லது அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களது விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம்.

பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 20.05.2022 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு விரைவு அஞ்சல் செய்ய வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,
திருவல்லிக்கேணி, சென்னை – 5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *