தேசிய கடல்சார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
இந்திய தேசிய கடல்சார் நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய கடல்சார் நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவில் வேலைவாய்ப்பு பெறலாம். விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். தேசிய கடல்சார் நிறுவனத்தின் பணியிடங்கள் கோவாவில் இருக்கும்.
பணிவிவரங்கள்:
தேசிய கடல்சார் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள டெக்னிக்கல் பிரிவு காண வேலைவாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். தேசிய கடல்சார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு பெற கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் விவரங்கள் இங்கே கிழே கொடுத்துள்ளோம். அதனை முழுமையாக பார்க்கவும். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்கள் 44 ஆகும்.
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்கள் புவியியல், தொல்லியல் வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம் போன்ற பிரிவுகளில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்கள் இருக்கும். தேசிய கடல்சார் நிறுவனத்தின் பணியிடங்களில் வேலைவாய்ப்பு பெற புவியியல், தொல்லியல், வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நூலக அறிவியல் முடித்தவர்கள் எலக்ட்ரானிக், தொலைத்தொடர்பு கணினி அறிவியல், கணிப்பொறிஇயல் தகவல் தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
இந்திய தேசிய கடல்சார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் மாத சம்பளமாக ரூபாய் 9300 தொகையும் முதல் ரூபாய் 34, 800 வரை பெறலாம்.
வயது:
தேசிய கடல்சார் நிறுவனத்தின் பணி வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
தேசிய கடல்சார் நிறுவனத்தில் தேர்ச்சி முறையானது எழுத்து தேர்வு துறைவாரியான தேர்வு திறனறிவு தேர்வு போன்ற மூன்று தேர்வுகள் மூலமாக தகுதி பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படுவார்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 17ஆம் தேதி 2020 ஆகும். மேலும் தேவைப்படும் தகவல்களை பெற அதிகாரப்பூர்வ லிங்குகளை கிளிக் செய்து பெறலாம். இங்கு அதிகாரபூர்வ லிங்கினை https://www.nio.org/ கொடுத்துள்ளோம்.
அதேபோல் தேசிய கடல்சார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிக்கை லிங்கிணையும் இங்க்கு இணைத்துள்ளோம் அதனை http://itg.nio.org/public/public.nsf/B9F68525366328AB65258577002FB9C4/$FILE/Advertisement%20Technical%20Assistant-2020.pdf
கிளிக் செய்து முழுமையாக படித்துப் பார்த்து தேசிய கடல்சார் நிறுவனத்தின் தளத்தில் விண்ணப்பிக்கவும். தேசிய கடல்சார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் கோவாவில் பணி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.