மத்திய அரசு மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் ஆராய்ச்சி மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஆர்ஐயில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்
2021 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட், டெக்னிசியன், அஸிஸ்டெண்ட், ஸ்டேனோகிராபர் போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 25 ஆகும்.
சம்பளம்
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது. தேந்தெடுக்கப்படுவோர்கள் ரூபாய் 35, 400 முதல் 1,12,400 வரை பெறலாம்.
டெக்னிசியன் கிரேடு 1, கிரேடு 2போன்ற பணியிடங்களுக்கு ரூபாய் 21,700 -69,100 வரை பெறலாம்.
கல்வி
மின் ஆராய்ச்சி பணி நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற இன்ஜினியரிங் டிப்ளமோ/ சிவில் இன்ஜினியரிங் தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணபிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள்.
டெக்னிசீயன் பணிக்கு ஐடிஐ எலக்ட்ரிசியன் டிரேடு பிரிவில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அஸிஸ்டெண்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் பணிக்கு பட்டப் படிப்பை தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது
இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பத்தாரர்கள் வயது மாறுபடும். இது குறித்து அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு
எம்சிக்யு தேர்வு/ஸ்கில் தேர்வு/ ஸ்டோனோகிராபர் தேர்வு/ டிரேடு தேர்வு/ டாக்குமெண்ட் வெரபிகேசன் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பத் தேதி
ஆன்லைன் மூலம் தகுதியுடையோர் விண்ணபிக்கலாம். சிபிஐஆர் பணியிடங்களுக்கு மார்ச் 15 முதல் ஏபர்ல் 5,2021 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப இணைப்பு
அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து படிக்கவும். https://cpri.in/index.php?option=com_content&view=article&id=538
அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்க இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.