கல்விவேலைவாய்ப்புகள்

பி என் பி வங்கியில் மேலாளர் வேலைவாய்ப்பு

மத்திய அரசாங்க வேலைக்காக காத்திருக்கிறீர்களா! வங்கி வேலைக்காக காத்திருக்கிறார்களா! என அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய வேலை வாய்ப்பு அறிவிப்பு.

வங்கி வேலை என்றாலே மக்களிடையே பெரிய பவுசு மிக்க பணி. அதுவும் வங்கி மேலதிகாரியாக வேலை செய்பவர்களுக்கு தனி கெத்து. மக்கள் அனைவரும் வங்கியை சார்ந்து உள்ளனர்; அந்த வங்கியிலேயே வேலை என்றால் சுகமாகத்தானே இருக்கும்.

பட்டப் படிப்பை முடித்த பட்டதாரி மாணவர்கள் பெரும்பாலோனோர் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, வங்கி தேர்வு (ஐபிபிஎஸ்) ஆகிய மூன்று தேர்வுகளை எதிர்நோக்கி தம் எதிர்காலத்தை பயணிக்கின்றனர். இதற்கு கடுமையான உழைப்பு செய்ய வேண்டும் அப்படி உழைத்தோமாயின் வாழ்க்கை முழுவதும் உட்கார்ந்தே சம்பாதிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இப்படி உட்கார்ந்து ராஜபோக வாழ்க்கை வாழ 535 மேலாளர் காலிப் பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

பிஏ, பிஎஸ்சி, பிஇ, பி டெக் என பல பட்டப்படிகள்‌ இருக்கின்றன. எந்தப் பட்டபப்படிப்பு படித்திருந்தாலும் அதற்கு மேற்பட்ட முதுகலை பட்டதாரிகளும், வங்கித்துறைகாகவே அக்கௌண்ட்ஸ் படிக்கும் சிஏ மற்றும் சிடபிள்யூஏ என அனைத்து படிப்பு சார் இளைஞர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் மேலாளர் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச வயது 25 மற்றும் அதிகபட்ச வயது 35யுமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பிரிவினருக்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இணையதளத்தில் தேர்வுகள் நடத்தப்படும். அதில் தேர்வானவர்கள் நேர்காணலில் மேலும் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்விரண்டை வைத்து முடிவுகள் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்க

இணையதளம் மூலமாகவே இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். ரூபாய் 850 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்ப கட்டணத்திலும் பிரிவுகளுக்கு ஏற்றவாறு சலுகைகள் உண்டு.

தகுதியான இளைஞர்கள் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

https://www.pnbindia.in/recruitments.aspx

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பங்களை 29-9-2020ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இளைஞர்களே! 29-9-2020 தேதியை குறித்து வைத்துக்கொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளவும் வேலைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் அதிகாரப்பூர்வமான இணையதளம் இதோ

https://www.pnbindia.in/home.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *