கல்விசெய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

தமிழ்நாட்டில் இந்து அறநிலைத்துறையில் அறிய வேலை வாய்ப்பு!!!!

திருவேற்காடு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில் பல்வேறு பணிகளுக்காக மொத்தம் 23 காலி பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவேஇந்து அறநிலையத் துறையில் வேலை செய்ய விரும்பும் அனைத்து நண்பர்களும் இவ்வாய்ப்பைப் தவறவிடாமல் சாதுரியமாக சிந்தித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

பணிகள் மற்றும் காலியிடங்கள்

கீழ்கண்ட பணிகளுக்கு தகுந்தாற்போல் சம்பளம் ஆனது ரூபாய் 11,600 /- முதல் ரூபாய் 58,600/- வரை கொடுக்கப்படும். மேலும் சம்பளம் குறித்த விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

இளநிலை உதவியாளர் (01),ஓட்டுநர் (03), கடைநிலை(04 ), உதவி மின் பணி (01), அம்மன் மடப்பள்ளி (01),பரிசாரகர் (01), பெருமாள் கோவில் மடப்பள்ளி (02) ஒத்து (01), தாளம் (01), டமாரம் (01), திருச்சின்னம் (01 ), முடி கொட்டகை மேஸ்திரி (01), குழாய் பராமரிப்பாளர் (01), தமிழ் புலவர் (01), அர்ச்சகர் (01), ஓதுவார் (01),பரிசாரகர் (01), அர்ச்சகர் (01), இரவு காவலர் (01).

கல்வி தகுதி

இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுனர் ,கடைநிலை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

உதவி மின் பணி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஐடிஐ (எலக்ட்ரிக்கல் ,வயர் மேன்) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

குழாய் பராமரிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஐடிஐ (பிளம்பர்) மற்றும் இரண்டு வருடம் முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.

தமிழ் புலவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Degree(B.Lit or B.A or M.Lit or M.A ) படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு நன்றாக எழுத படிக்க தெரிந்த மற்றும் இந்து சமய பாடசாலையில் பயின்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது வரம்பு ஆனது 1.09.2021 ஒன்றின் படி விண்ணப்பிக்கும் நபர்களின் வயது குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

நேர்காணல்(Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம் மேலும் இந்து சமய அறநிலையத்துறை தேர்ந்தெடுக்கும் முறைகளைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான 22.10.2021 மாலை 5.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பை கவனமாக படித்து கல்வித் தகுதி மற்றும் வயது தகுதி ஆகியவை சரியாக உள்ளதா என்று பார்த்து விண்ணப்பிக்கவும்.

அஞ்சல் முகவரி

இணை ஆணையர் ,செயல் அலுவலர், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்,திருவேற்காடு ,சென்னை 600077.

அதிகாரப்பூர்வ இணையதளம்

hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து இந்து இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பைப் பெற்று பயன் பெறுங்கள்….

இது போன்ற பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல்களை நீங்கள் அனைவரும் தெரிந்துகொண்டு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள சிலேட்டு குச்சி உதவும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *