மாதம் 70000 ருபாய் சம்பளத்தில் அரசு வேலை
தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Accountant மற்றும் பல்வேறு பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Tamilnadu State Wetland Authority |
பணியின் பெயர் | Accountant and Other |
பணியிடங்கள் | 15 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNSWA காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Accountant மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- GIS Expert – 01 பணியிடங்கள்
- Environmental science Expert – 01 பணியிடங்கள்
- Climate Expert – 01 பணியிடங்கள்
- Hydrology Consultant – 01 பணியிடங்கள்
- Civil Engineer – 02 பணியிடங்கள்
- Geologist – 01 பணியிடங்கள்
- Economist – 01 பணியிடங்கள்
- Life Science Professional – 01 பணியிடங்கள்
- Fisheries Expert – 01 பணியிடங்கள்
- Technical Assistant – 01 பணியிடங்கள்
- System Analyst – 01 பணியிடங்கள்
- Data Entry Operator – 01 பணியிடங்கள்
- Legal Expert – 01 பணியிடங்கள்
- Accountant – 01 பணியிடங்கள்
TNSWA கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BCA, MCA, B.E, LLB, CA, ICWA, M.Sc, B.E, M.E, Ph.d , Degree என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNSWA ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- GIS Expert, Environmental science Expert, Climate Expert, Hydrology Consultant, Civil Engineer – ரூ.60000/-
- Geologist, Economist,Life Science Professional, Fisheries Expert – ரூ.45000/-
- Technical Assistant – ரூ.35000/-
- System Analyst – ரூ.70000/-
- Data Entry Operator – ரூ.25320/-
- Legal Expert – ரூ.45000/-
- Accountant – ரூ.55000/-
TNSWA தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNSWA விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 07.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.