தமிழக ரயில்வே துறையில் வேலை
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் General Manager, Joint General Manager மற்றும் Deputy General Manager ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் | Chennai Metro Rail Limited (CMRL) |
பணியின் பெயர் | GM, JGM and DM |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பணியிடங்கள்:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CMRL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- General Manager (Planning & Business Development) – 01 பணியிடம்
- Joint General Manager (Finance & Accounts) – 01 பணியிடம்
- Deputy Manager (Corporate Affairs) – 01 பணியிடம்
GM, JGM and DM கல்வி விவரம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் AICTE அல்லது UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.
- General Manager (Planning & Business Development) – Marketing / Finance பாடப்பிரிவில் Graduate Degree மற்றும் MBA
- Joint General Manager (Finance & Accounts) – Graduate Degree, CA அல்லது MBA Degree
- Deputy Manager (Corporate Affairs) – Electrical / Electronics பாடப்பிரிவில் B.E, B.Tech மற்றும் MBA
GM, JGM and DM அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
GM, JGM and DM வயது வரம்பு:
- GM பணிக்கு குறைந்தபட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை எனவும்,
- JGM பணிக்கு அதிகபட்சம் 43 வயது எனவும்,
- DM பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும் வயது வரம்பு CMRL-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 05 ஆண்டுகள் முதல் 02 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
CMRL ஊதிய விவரம்:
- GM பணிக்கு ரூ.2,25,000/- என்றும்,
- JGM பணிக்கு 1,25,000/- என்றும்,
- DM பணிக்கு ரூ.70,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
CMRL தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Medical Examination வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
CMRL விண்ணப்ப கட்டணம்:
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.50/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
CMRL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 03.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.