தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் பெல்லோஷிப் திட்டம் 2022-24 (TNCMFP) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம் | Government Of Tamil Nadu Special Programe Implementation Department |
பணியின் பெயர் | Tamil Nadu Chief Minister’s Fellowship Programe 2022-24 (TNCMFP) |
பணியிடங்கள் | 30 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNCMFP பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்ட அறிவிப்பில், Tamil Nadu Chief Minister’s Fellowship Programme 2022-24 (TNCMFP) பணிக்கு என்று மொத்தமாக 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TNCMFP கல்வி தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Engineering, Medicine, Law, Agriculture, Veterinary Science பாடப்பிரிவில் Bachelor’s degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Masters degree முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
TNCMFP அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
TNCMFP வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.05.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்ச வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் இதில் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதும், BC / MBC விண்ணப்பதாரர்களுக்கு 33 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNCMFP ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.65,000/- பெறுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் இத்துடன் கூடுதல் தொகையாக மாதம் ரூ.10,000/- பெறுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TNCMFP தேர்வு முறை:
- Preliminary Assessment (Computer-based Test)
- Comprehensive Examination (Written Examination)
- Personal Interview
TNCMFP விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.05.2022 ம் தேதி முதல் 10.06.2022 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.