வேலைவாய்ப்புகள்

வேலூர் மாவட்டமா நீங்கள் இதோ உங்களுக்கான வாய்ப்பு

வேலூர் மாவட்டத்தில் இருந்து தற்போது மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Packer Clerk, Cook போன்ற பல்வேறுபதவிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 10.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம்மத்திய சிறை, வேலூர்
பணியின் பெயர்Packer Clerk, Cook and others
பணியிடங்கள்11
விண்ணப்பிக்க கடைசி தேதி10.08.2022
விண்ணப்பிக்கும் முறைOffline

மத்திய சிறை பணியிடங்கள்:

வேலூர் மாவட்ட, மத்திய சிறையில் காலியாக உள்ள 11 பணியிடங்கள் பின்வரும் பணிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.

சிப்ப எழுத்தாளர் (Packer Clerk) – 02

சமையலர் (Cook) – 01

தோட்ட காவலர் (Garden Watchman) – 01

Central Jail கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

சிப்ப எழுத்தாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சமையலர் பணிக்கு 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தோட்ட காவலர், தூய்மை பணியாளர் பணிகளுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Central Jail அனுபவம்:

சிப்ப எழுத்தாளர் மற்றும் சமையலர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

Central Jail வயது விவரம்:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 32 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SCA / SC / ST – 05 வருடங்கள் மற்றும் MBC / BC / BC (M) – 02 வருடங்கள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சிறை சம்பள விவரம்:

சிப்ப எழுத்தாளர் மற்றும் சமையலர் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 02 ஊதிய அளவின் படி, ரூ. 15,900/- முதல் ரூ.50,400/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

தோட்ட காவலர், தூய்மை பணியாளர் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 01 ஊதிய அளவின் படி, ரூ. 15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

மத்திய சிறை தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

செய்முறை தேர்வு (Practical Test)

எழுத்து தேர்வு (Written Test)

நேர்முக தேர்வு (Interview)

மத்திய சிறை விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 10.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

சிறைக்கண்காணிப்பாளர்,
மத்திய சிறை,
வேலூர் – 632 002.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *