TNPSC யில் பெண்களுக்கான அறிய வாய்ப்பு
தமிழ்நாடு பொதுப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர் (பெண்கள் மட்டும்) பதவிக்கு 16.08.2022 வரை ஆன்லைன் முறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Assistant Director |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNPSC காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது உதவி இயக்குநர் பதவிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
உதவி இயக்குநர் வயது வரம்பு:
01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி:
விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து வீட்டு அறிவியல் அல்லது உளவியல் அல்லது சமூகவியல் அல்லது குழந்தை மேம்பாடு அல்லது உணவு மற்றும் ஊட்டச்சத்து அல்லது சமூகப் பணி அல்லது மறுவாழ்வு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி இயக்குநர் விண்ணப்பக் கட்டணம்:
- பதிவுக் கட்டணம்: ரூ. 150/-
- தேர்வுக் கட்டணம்: ரூ. 200/-
- SC/ ST/ PWD விண்ணப்பித்தார் : Nil
- பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
தேர்வு செயல்முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியானவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.tnpsc.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 18.07.2022 முதல் 16.08.2022 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.