50,400/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு
விருதுநகர் மாவட்ட, இந்து சமய அறநிலையத்துறை ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள Plumber, Asst. Electrician, Jr. Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை, விருதுநகர் (TNHRCE Virudhunagar) |
பணியின் பெயர் | Plumber, Asst. Electrician, Jr. Assistant and others |
பணியிடங்கள் | 57 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:
விருதுநகர் மாவட்டம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், வசூல் எழுத்தர், சீட்டு விற்பனையாளர், அலுவலக உதவியாளர், உபகாவல், ஓதுவார் போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 57 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE கல்வி தகுதி:
- வரைவளர் பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- பிளம்பர், உதவி மின் பணியாளர் பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க ததகுதியானவர்கள்
- அலுவலக உதவியாளர் பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- இளநிலை உதவியாளர், வழக்கு எழுத்தர், வசூல் எழுத்தர், சீட்டு விற்பனையாளர், பண்டக காப்பாளர் பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
TNHRCE வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
TNHRCE ஊதியம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.65,500/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் செய்முறை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை விண்ணப்பிக்கும் முறை:
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
- அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்ப படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேரில் சென்றும் சமர்ப்பிக்கலாம்.
- 05.09.2022 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.