தமிழக சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு
தமிழக சமூக பாதுகாப்பு துறையில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் செங்கல்பட்டு மாவட்ட அரசினர் சிறப்பு இல்லத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சிறப்பு இல்லத்தில் Counsellor பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது.
நிறுவனம் | தமிழக சமூக பாதுகாப்பு துறை (TN SSD Chengalpattu) |
பணியின் பெயர் | Counsellor |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சமூக பாதுகாப்பு துறை பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Counsellor பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Counsellor உதவி தொகை:
Counsellor பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.5,000/- மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.
Counsellor கல்வி தகுதி:
- விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரியில் Psychology பாடப்பிரிவில் முதுகலை பட்டம் (M.Sc Degree) தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
- இப்பணிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Counsellor வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
TN SSD தேர்வு முறை :
Counsellor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSD விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து 12.08.2022 என்ற கடைசி நாளுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.