வேலைவாய்ப்புகள்

தேர்வில்லா அரசு வேலை

திருப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (AAVIN திருப்பூர்) ஆனது தமிழ்நாடு கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-ஆகஸ்ட்-2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்ஆவின் திருப்பூர்
பணியின் பெயர்தமிழ்நாடு கால்நடை ஆலோசகர்
பணியிடங்கள்08
விண்ணப்பிக்க கடைசி தேதி 30-ஆகஸ்ட்-2022
விண்ணப்பிக்கும் முறைOffline
ஆவின் திருப்பூர் காலிப்பணியிடங்கள்:

ஆவின் திருப்பூரில் தமிழ்நாடு கால்நடை ஆலோசகர் பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Veterinary Consultant கல்வி தகுதி:

AAVIN திருப்பூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.V.Sc & AH முடித்திருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் 30-ஆகஸ்ட்-2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நேர்காணல் நடைபெறும் இடம்:

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர் – 641 605.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *