போக்குவரத்து கழக புதிய வேலைவாய்ப்பு
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் ஆன NCRTC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager/ Sr. Executive/ Executive (Civil) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளததெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் |
பணியின் பெயர் | Assistant Manager/ Sr. Executive/ Executive (Civil) |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NCRTC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager/ Sr. Executive/ Executive (Civil) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழக வயது வரம்பு:
Assistant Manager/ Sr. Executive/ Executive (Civil) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்..
NCRTC கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Civil Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழக முன் அனுபவம்:
- விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 20 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Government/ Railway PSUs/ CPSEs/ Metro Rail Corporations ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
NCRTC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.68,189/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழக தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.