கிருஷ்ணகிரி மாவட்டம்மா நீங்க இது அரிய வாய்ப்பு
வகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (Krishnagiri Fisheries Department) கீழ் செய்யப்பட்டு வரும் கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணை, மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மீன்வள உதவியாளர் (Fishery Assistant) பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
நிறுவனம் | Krishnagiri Fisheries and Fisherman Welfare Department (Krishnagiri Fisheries Department) |
பணியின் பெயர் | Fishery Assistant |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பணியிடங்கள்:
கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணை, மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள Fishery Assistant பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Fishery Assistant ஊதிய விவரம்:
குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.58,500/- வரை மாத ஊதியமாக இப்பணிக்கு என தேர்வாகும் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.
Fishery Assistant தகுதிகள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் வீச்சுவலை வீசுதல், பழுதுப்பட்ட வலை சரி செய்தல், புதிய வலை பின்னுதல் மற்றும் நீச்சல் திறன் போன்ற தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி பற்றிய கூடுதல் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறை வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் krishnagiri.nic.in என்ற இணைய முகவரியில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 16.08.2022 என்ற இறுதி நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர்,
சென்னை – 35.Download Notification LinkApplication Link