வேலைவாய்ப்புகள்

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இவ்ளோ சம்பளத்தில் வேலையா?

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (Kalakshetra Foundation) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Tutor (Music) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ, 1,12,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம்கலாக்ஷேத்ரா அறக்கட்டளை
பணியின் பெயர்Tutor (Music)
பணியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி தேதி18.09.2022
விண்ணப்பிக்கும் முறைOffline

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை காலிப்பணியிடங்கள்:

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் (Kalakshetra Foundation) காலியாக உள்ள Tutor (Music) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tutor (Music) வயது வரம்பு:

Tutor (Music) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Tutor (Music) கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு அல்லது Carnatic Music பாடப்பிரிவில் Diploma அல்லது Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Tutor (Music) ஊதியம்:

Tutor (Music) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Pay Level 11 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Director,
Kalakshetra Foundation,
Thiruvanmiyur, Chennai – 600 041.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *