12 லட்சபேருக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பு
இந்தியாவில் கொரோனா நோய் காரணமாக மக்கள் பெருமளவில் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியாவில் வேலைவாய்ப்பு இழந்து பலர் தடுமாறி வருகின்றனர். வேலையில் இருப்போருக்கு பாதி வருமானமே வருகின்றது. இந்த நிலையில் ஆப்பிள் சாம்சங் ஃபாக்ஸ்கான் போன்ற அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து தொழில் தொடங்க அனுமதி கோரியுள்ளனர். இதனை மத்திய தொழில் நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
2025 ஆண்டுவரை இந்த நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 11 லட்சம் கோடி அளவு முதலீடு செய்து பெருமளவில் வேலைவாய்ப்பு உருவாக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் மொபைல்போன் நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு ஊக்கத்தொகை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதனைப் பயன்படுத்தி தங்கள் தொழிலை நிறுவ வெளிநாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. இதன் மூலம் சுமார் 12 லட்சம் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்னிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குவது இந்தியர்கள் மூன்று லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 9 லட்சம் பேருக்கு மறைமுகமான வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறலாம் என்று தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் வெளிநாட்டைச் சேர்ந்த 22 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முயன்று வருகின்றது.
தைவான், தென் கொரியா, ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகள் இந்தியாவில் உற்பத்தியினை தொடங்க விண்ணப்பித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் இந்தியாவில் ரூபாய் 15,000 மதிப்புள்ள மொபைல் போன்களை உருவாக்கப் போவதாக தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் சில ஆப்பிள் நிறுவனத்திற்கு ஸ்மார்ட்போன் தயாரித்து தரும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விண்ணப்பத்தில் சீன நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் இந்தியர்கள் அதிக பணி வாய்ப்பு பெறலாம். இதன் மூலம் சுமார் 10 லட்சம் கோடிக்கு மேல் வருமானம் பெறலாம் என புள்ளியல் விவரங்கள் தெரிவிக்கின்றன.
அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவிக்க காரணம் இந்தியாவில் இருந்த சீன நிறுவனங்கள் அகற்றப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது என்றும் கூறலாம். இதனை நன்கு உணர்ந்து வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்வதால் இந்தியர்கள் பணி வாய்ப்பு பெறுவார்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வாங்கும் இடத்தில் இருக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.