கடலோர காவல் படையில் அரசு வேலை
இந்திய கடலோர காவல்படையில் (மேற்கு) (ICGR West) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Motor Transport Fitter, Spray Painter, Motor Transport Mechanic ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
நிறுவனம் | Indian Coast Guard Region (West) (ICGR) |
பணியின் பெயர் | Motor Transport Fitter, Spray Painter, Motor Transport Mechanic |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள்:
இந்திய கடலோர காவல்படையில் (மேற்கு) காலியாக உள்ள Motor Transport Fitter, Spray Painter, Motor Transport Mechanic ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 07 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ICGR கல்வித் தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI, Diploma படித்தவராக இருக்க வேண்டும்.
ICGR அனுபவம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் Automobile Workshop-ல் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 02 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ICGR வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
ICGR ஊதியம்:
இந்த அரசு பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் Level 2 ஊதிய அளவின் படி, ரூ.19,900/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
ICGR தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு தகுதி பெற்ற நபர்கள் Written Test, Trade / Skill Test வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
ICGR விண்ணப்பிக்கும் முறை:
இந்த கடலோர காவல்படை பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 09.07.2022 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.