வேலைவாய்ப்புகள்

படித்த பட்டதாரிகளுக்கு வங்கியில் வேலை

IDBI வங்கி நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Head – Learning & Development பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்IDBI Bank
பணியின் பெயர்Head – Learning & Development
பணியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி தேதி13.07.2022
விண்ணப்பிக்கும் முறைEmail
IDBI Bank காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தற்போது Head – Learning & Development பணிக்கு IDBI வங்கி நிறுவனத்தில் ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.

IDBI Bank கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MBA / M.Phil / Ph.d பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமானதாகும்.

IDBI Bank அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 15 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட Human Resources (HR) / Training அல்லது வங்கி துறைகளில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

மேலும் senior level in HR / Training ஆக அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IDBI Bank வயது விவரம்:

01.07.2022 அன்றைய நாளின்படி, இப்பணிக்கு 45 வயது முதல் 55 வயதுக்குள் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IDBI Bank ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

IDBI Bank தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

IDBI Bank விண்ணப்பிக்கும் முறை:

வங்கி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து recruitment@idbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *