எட்டாம் வகுப்பு முடிப்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் (TNSIC) ஏற்பட்டுள்ள Office Assistant பணிக்கான காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனம் | தமிழ்நாடு தகவல் ஆணையம் (TNSIC) |
பணியின் பெயர் | Office Assistant |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு பணியிடங்கள்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் (TNSIC) காலியாக உள்ள Office Assistant பணிக்கு என 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Office Assistant வயது வரம்பு:
- 01.07.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேல் உள்ளவராகவும், 32 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
- மேலும் MBC / DNC / BC பிரிவினருக்கு 02 ஆண்டுகள் எனவும் SC பிரிவினருக்கு 05 ஆண்டுகள் எனவும் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
TNSIC ஊதிய விவரம்:
Level – 1 என்ற ஊதிய அளவின் படி, Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
Office Assistant கல்வி விவரம்:
- அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Office Assistant விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 02.09.2022 என்ற இறுதி நாளுக்குள் www.tnsic.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.