Part time வேலை மாதம் ரூ.50,000 சம்பளம்
ESIC மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் ஆயுஷ் மருத்துவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | ESIC |
பணியின் பெயர் | Ayurvedic Physician |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ESIC Part Time காலிப்பணியிடங்கள்:
Ayurvedic Physician பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Physician கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/சட்டப்பூர்வ மாநில வாரியம்/கவுன்சில்/இந்திய மருத்துவ ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய மருத்துவத்தின் மத்திய பதிவேடு அல்லது இந்திய மருத்துவத்தின் மாநில பதிவேட்டில் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.
ESIC Ayurvedic Physician வயது வரம்பு:
Interview தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது 30 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய/மாநில அரசின் எந்தவொரு நிறுவனத்திலும் சேவையாற்றுபவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க ; குரூப் 2 தேர்வுக்கான வினாவங்கி படியுங்க!
ESIC Ayurvedic சம்பள விவரம்:
Ayush Physician பதவிக்கு மாதம் ரூ.50,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மற்றும் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே வேலை.
ESIC மருத்துவக் கல்லூரி விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/EWS/ESIC Candidates/Female Candidates & Ex-servicemen & PH விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.225/-
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள மருத்துவ வல்லுநர்கள், அவர்களின் விண்ணப்பப் படிவத்துடன் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.