எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு Rs.40,000/- சம்பளத்தில் அரசு வேலை வாய்ப்பு!!!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல சங்கம் தற்பொழுது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான 20.10.2021 தேதிக்குள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி அரசு வேலையை பெறுங்கள்…
பணிகள் மற்றும் காலியிடங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் அந்தந்த பணிகளுக்கு ஏற்ற கல்வித்தகுதி ஆகியவற்றை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.
Physiotherapist ( 01 ), Para Medical Opthalmic Assistant (01) , Data Processing Assistant (01), IT Co-ordinator (01), IDSP – DPHL Lab Attender (01), NCD Data Entry Operator ( 01) , MHC-Driver (01), District Quality Consultant (01)
சம்பளம்
சம்பளம் ஆனது பணிகளின் தகுதிக்கு ஏற்றது போல் ரூபாய் 5,500/- ல் இருந்து ரூபாய் 40,000/- வரை வழங்கப்படும். சம்பளம் குறித்தான தகவல்களை மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்படும் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும்.
கல்வி தகுதி
கல்வி தகுதியானது ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும்.அவை பின்வருமாறு
Physiotherapist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Bachelor Of Physiotherapist படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Para Medical Opthalmic Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.Sc (Optometry) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Data Processing Assistant மற்றும் NCD Data Entry Operator ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.Sc (Computer science) ,BCA,MCA கணினி சார்ந்த படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NCD Data Entry Operator பணிக்கு Typing (Tamil/ English) தெரிந்திருக்க வேண்டும்.
IT Co-ordinator பணிக்கு MCA ,B.E , B.Tech படித்தவர்கள் மற்றும் ஒரு வருட கால முன் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
IDSP – DPHL Lab Attender பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
MHC – Driver பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
District Quality Consultant பணிக்கு Dental , AYUSH , Nursing , Social Science, Life Science with Master Degree மற்றும் இரண்டு வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை
நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கலாம் மேலும் தகவலை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை
விரைவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.
அஞ்சல் முகவரி
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம், திண்டல், ஈரோடு -638012.
அதிகாரப்பூர்வ இணைய தளம்
erode.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று உங்களின் கல்விதகுதி மற்றும் வயது தகுதி ஆகியவற்றை கவனமாக பார்த்து தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து அரசு வேலையை பெற்று பயன்பெறுங்கள்..
நண்பர்களே மறந்துவிடாதீர்கள் இவ் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் கடைசி நாளான 20.10.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்
இதுபோன்ற மேலும் வேலைவாய்ப்பு தகவல்களை அரசு வேலைக்காக காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் சிலேட்டு குச்சி தொடர்ந்து வழங்கும்…