உங்களுக்கு தமிழ் எழுத்த படிக்க தெரியுமா இதோ அரசு வேலை
கன்னியாகுமரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Record Clerk, Office Assistant மற்றும் Night Watchman ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – கன்னியாகுமரி (DRDP Kanniyakumari) |
பணியின் பெயர் | Record Clerk, Office Assistant and Night Watchman |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை காலிப்பணியிடங்கள்:
கன்னியாகுமரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கீழ் செயல்பட்டு வரும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள Record Clerk, Office Assistant மற்றும் Night Watchman ஆகிய பணிகளுக்கு பின்வரும் முறையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- பதிவுறு எழுத்தாளர் (Record Clerk) – 01
- அலுவலக உதவியாளர் (Office Assistant) – 03
இரவு காவலர் (Night Watchman) – 01
DRDP Kanniyakumari கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
- Record Clerk பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Office Assistant பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- Night Watchman பணிக்கு தமிழில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
DRDP Kanniyakumari வயது வரம்பு:
- Record Clerk, Office Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Night Watchman பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Record Clerk, Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
சம்பளம்:
- Record Clerk பணிக்கு ரூ.15,900/- முதல் ரூ.50,400/- வரை என்றும்,
- Office Assistant பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை என்றும்,
- Night Watchman பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
- இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இதர படிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DRDP Kanniyakumari தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DRDP Kanniyakumari விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தாபால் செய்ய வேண்டும். 29.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.