Engineering பட்டதாரிகளுக்கு ரூ. 26,000/- சம்பளத்தில் வேலை
கோயம்புத்தூர் மாவட்ட மின் ஆளுமைச் சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள e-District Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எங்களது நிறுவனம் உங்களுக்கு உதவும் வகையில் இச்செய்தி வெளியிடப்பட்டது. இதனை படித்து பயனடைவீர்கள்.
நிறுவனம் | District e-Governance Society |
பணியின் பெயர் | e-District Manager |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
District e-Governance Society பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி e-District Manager பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
District e-Governance Society கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech in Computer Science/ Computer Science and Engineering, MCA in Computer Science, M.Sc in Computer Science/ IT/ Computer Software Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
District e-Governance Society வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
District e-Governance Society ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.26,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
District e-Governance Society தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Online Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.07.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.