+2 படித்தவரா நீங்கள் இதோ ஒரு அறிய வாய்ப்பு
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள District Consultant, Psychologist, Social Worker, Data Entry Operator, IT Coordinator (LIMS), Refrigeration Mechanic மற்றும் Account Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.07.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் |
பணியின் பெயர் | District Consultant, Psychologist, Social Worker, Data Entry Operator, ITCoordinator (LIMS), Refrigeration Mechanic மற்றும் Account Assistant |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்கள்:
District Consultant, Psychologist, Social Worker, Data Entry Operator, ITCoordinator (LIMS), Refrigeration Mechanic மற்றும் Account Assistant ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.
புதுக்கோட்டை மாவட்ட பணிகளுக்கான கல்வி தகுதி:
இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduation, B.Com, BE/ B.Tech, ITI, 12th, MBBS, BDS, Post Graduation Degree, MCA முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
தகுதியான நபர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் மற்றும் நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பிக்கும் நபர்களின் முகவரிக்கு தபால் வழியாகவும், மின்னஞ்சல் முகவரி வழியாகவும் தெரிவிக்கப்படும்.
சம்பள விவரங்கள்:
- District Consultant – ரூ.40,000-
- Psychologist – ரூ.25,000/-
- Social Worker – ரூ.25,000/-
- Data Entry Operator – ரூ.12,000-
- ITCoordinator (LIMS) – ரூ.16,500-
- Refrigeration Mechanic – ரூ.20,000-
- Account Assistant – ரூ.12,000/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செயற்செயலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், புதுக்கோட்டை மாவட்டம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், புதுக்கோட்டை அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.07.2022 அன்று மாலை 5.00 மணி வரை. அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.