10 ஆம் வகுப்பு படித்தவரா இதோ அரசு வேலை
தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Social Worker, Assistant Cum Data Entry Operator ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம் | District Child Protection Unit Thiruvarur (DCPU Tiruvarur) |
பணியின் பெயர் | Social Worker, Assistant Cum Data Entry Operator |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியிடங்கள்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) Social Worker, மற்றும் Assistant Cum Data Entry Operator ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணி தகுதிகள்:
Social Worker பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate அல்லது Post Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Social Work, Guidance and Counselling, Psychology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
Assistant Cum Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் / தமிழில் தட்டச்சு செய்வதில் Senior Grade சான்றிதழ் பெற்றவராக மற்றும் கணிப்பொறி இயங்குவதில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அனுபவ விவரம்:
Social Worker பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் 2 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வயது விவரம்:
Social Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என DCPU நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Assistant Cum Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
DCPU ஊதிய விவரம்:
Social Worker பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.14,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
DCPU தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
DCPU விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 24.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.