தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை
தமிழக அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் | District Child Protection Unit Chengalpattu (District Child Protection Unit Chengalpattu (DCPU Chengalpattu Chengalpattu) |
பணியின் பெயர் | Assistant Cum Data Entry Operator |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் பணியிடங்கள் :
செங்கல்பட்டு மாவட்டம் சமூக பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிப்பில் Assistant Cum Data Entry Operator பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதி குழுமத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Assistant Cum Data Entry Operator கல்வி விவரம்:
Assistant Cum Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Assistant Cum Data Entry Operator தகுதிகள்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு செய்வதில் முதுநிலை சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி பயிற்சி சான்றிதழ் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பிக்கும்.
- கணினி உபயோகம் செய்வதில் குறைந்தபட்சம் 1 வருடம் வரை அனுபவ உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Assistant Cum Data Entry Operator வயது விவரம்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 40 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
Assistant Cum Data Entry Operator ஊதிய விவரம்:
Assistant Cum Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000/- மாத ஊதியமாக தரப்படும்.
Assistant Cum Data Entry Operator தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Assistant Cum Data Entry Operator விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க திறமை மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 25.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
பழைய ஜீ. எஸ்.டி ரோடு,
தாலுக்கா காவல் நிலையம் அருகில்,
செங்கல்பட்டு – 603 002.