வேலைவாய்ப்புகள்

B.Sc முடித்தவரா நீங்கள் ? இதோ உங்களுகான அறிய வாய்ப்பு

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் தொகுப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து 17.06.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர்தகவல் தொகுப்பாளர் (Data Analyst)
பணியிடங்கள்பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி17.06.2022
விண்ணப்பிக்கும் முறைOffline
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியிட விவரம்:

Data Analyst எனப்படும் தகவல் தொகுப்பாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முற்றிலும் ஓராண்டு கால தொகுப்பூதிய அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

தகவல் தொகுப்பாளர் கல்வி தகுதி:

BA / BCA / B.Sc. Statistics / B.Sc. Mathematics (10+2+3 Pattern) என எதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

அனுபவம்:

ஏதாவது ஒரு நிறுவனத்தில் தகவல் தொகுப்பாளராக (Data Analyst) 2 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

முக்கிய குறிப்பு:

மேற்கண்ட பணியிடம் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வரும் முற்றிலும் தற்காலிகமான ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையிலான பணியிடமாகும். இது மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாக கொண்டு எவ்விதத்திலும் அரசு பணி கோர இயலாது. மேலும் மேற்கண்ட பணியிடத்திற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

https://tiruppur.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள  விண்ணப்பங்கள் அனைத்து கல்விச்சான்று நகல் மற்றும் புகைப்படத்துடன் 17.06.2022 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எண்: 633,6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பப்பட வேண்டும். மேலும் விபரங்கள் தேவைப்படின் தொலைபேசி எண்.0421-2971198-க்கு தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *