செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

இன்னும் 12 நாள் மட்டுமே இருக்க வேலைவாய்ப்பை பக்காவா பயன்படுத்திக்கோங்க!!!!

தற்பொழுது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒரு புதிய வேலைவாய்ப்பை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 காலி பணியிடங்கள் உள்ள இந்த அறிவிப்பானது “ஓட்டுநர்” பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள நண்பர்கள், இந்த வேலையை கண்டிப்பாக வாங்கி விடனும் என்று எண்ணும் அனைவரும் கடைசி தேதியான 27.10.2021ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பறுங்கள்…..

சம்பளம் மற்றும் கல்வித்தகுதி

சம்பளம்:

ஓட்டுநர்களின் சம்பளம் ஆனது அவர்களின் தகுதி மற்றும் முன் அனுபவத்திற்கு ஏற்ப ரூபாய் 19,500/- ல் இருந்து 62,000/- வரை வழங்கப்படும்

கல்வுத் தகுதியானது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்படும் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு ஆனது 01.07.2021 ஒன்றிய தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தேர்ந்தெடுக்கும் முறையைப் பற்றி தகவல்களை தெரிந்துகொள்ள CMDA வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (Online) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

OC / BC / BCM / MBC & DNC போன்ற பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூபாய் 300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்

SC / ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூபாய் 150/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.10.2021

அதிகாரப்பூர்வ இணையதளம் : cmdachennai.gov.in

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தித்தாள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வேலைக்காக விண்ணப்பிக்க விரும்பும் நண்பர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள CMDA வின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு சென்று கவனமாகப் படித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி மற்றும் வயது தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

இதுபோன்ற மேலும் வேலைவாய்ப்பு தகவல்களை சிலேட்டு குச்சி உங்களுக்காக தொடர்ந்து வழங்கும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *