தமிழ் தெரிந்தால் மட்டும் போதும் ரூ.58,600/- சம்பளத்தில் அரசு வேலை !
சென்னை மாவட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE Chennai) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ள ஓதுவார் பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 20.09.2022 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE, Chennai) |
பணியின் பெயர் | ஓதுவார் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்கள்:
ஓதுவார் பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ளது.
ஓதுவார் பணி பற்றிய விவரங்கள்:
- தமிழ் மொழியில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் சமயம் அல்லது அரசு கல்வி நிறுவனங்களில் 3 ஆண்டு காலம் தேவாரம் பாடுவதில் பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 35 வயது எனவும் இந்து சமய அறநிலையத்துறையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஓதுவார் பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது Pay Matrix 22 என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.18,500/- முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
TNHRCE Chennai தேர்வு செய்யும் முறை:
இந்த அறநிலையத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE Chennai விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 22.08.2022 அன்று முதல் 20.09.2022 அன்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.