வேலைவாய்ப்புகள்

காரைக்குடி மக்களே உங்களுக்கான அரிய வாய்ப்பு

காரைக்குடி மாவட்டத்தில் உள்ள CSIR கீழ் செயல்படும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI Karaikudi) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Project Associate – I மற்றும் Senior Project Associate பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 02.08.2022 அன்று நடைபெற உள்ள Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த Interview-வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம்Central Electrochemical Research Institute, Karaikudi (CECRI Karaikudi)
பணியின் பெயர்Project Associate – I and Senior Project Associate
பணியிடங்கள்02
விண்ணப்பிக்க கடைசி தேதி02.08.2022
விண்ணப்பிக்கும் முறைOffline

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன காலிப்பணியிடங்கள்:

காரைக்குடி மாவட்டத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில், மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Project Associate – I மற்றும் Senior Project Associate ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

PA & SPA கல்வி தகுதி:

Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Physics பாடப்பிரிவில் M.Sc அல்லது Nanotechnology பாடப்பிரிவில் M.Tech Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Project Associate – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Biotechnology, Genomic Sciences பாடப்பிரிவில் M.Sc Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

PA & SPA வயது வரம்பு:

Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Project Associate – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

PA & SPA ஊதியம்:

Senior Project Associate பணிக்கு ரூ.42,000/- என்றும்,

Project Associate – I பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

CECRI Karaikudi தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 02.08.2022 அன்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CECRI Karaikudi விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *