ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- சம்பளம்மா?
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து “Coordinated design and tuning of controllers for on board/off board power electronic interfaces” என்ற தலைப்பில் பல்வேறு திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட, கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு அக்டோபர் 5, 2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Technical Assistant, Skilled Man Power |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
- Technical Assistant – 1 பணியிடம்
- Skilled Man Power – 2 பணியிடங்கள்
- Skilled Man Power – 1 பணியிடம்
கல்வி தகுதி:
- அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் டிப்ளமோ, BE/ B.Tech, ME/ M.Tech முடித்திருக்க வேண்டும். அதாவது,
- Technical Assistant – BE/ B.Tech, ME/ M.Tech in Power Systems Engineering, Power Electronics & Drives
- Skilled Man Power (SMP01) – Diploma in EEE
- Skilled Man Power(SMP02) – BE/ B.Tech, ME/ M.Tech in Power Systems Engineering, Power Electronics & Drives
Anna University சம்பள விவரம்:
- Technical Assistant – ரூ. 20,000/-
- Skilled Man Power – ரூ.150 – 200/- (ஒரு மணி நேரத்திற்கு)
- Skilled Man Power – ரூ. 200 – 300/- (ஒரு மணி நேரத்திற்கு)
அண்ணா பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் டாக்டர் எஸ்.வி. அன்புசெல்வி, குழு ஒருங்கிணைப்பாளர், RUSA 2.0 PO3, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 25 என்ற முகவரிக்கு 05.10.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.