சிலேட்குச்சி வீடியோஸ்வேலைவாய்ப்புகள்

பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.2,18,200/-

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Professor, Associate Professor, Assistant Professor பணிக்கென 55 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்தமுழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம்டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Professor, Associate Professor, Assistant Professor
பணியிடங்கள்55
விண்ணப்பிக்க கடைசி தேதி22.05.2022
விண்ணப்பிக்கும் முறைOnline
காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Professor, Associate Professor, Assistant Professor பணிக்கென 55 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Professor – 14
  • Associate Professor – 22
  • Assistant Professor – 19
கல்வித்தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Professor – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Doctoral Degree, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Associate Professor – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Masters Degree, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Professor – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது பணியின் அடிப்படையில் 30,35,40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:
  • Professor – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Associate Professor- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,31,400/- முதல் ரூ.2,17,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Professor – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 57,700/- முதல் ரூ.1,82,400/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.05.2022ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *