Job opportunity 2023: ஏர் இந்தியா விமான நிலையத்தில் டிகிரி முடித்த பெண்களுக்கு அதிக சம்பளத்தில் அறிய வேலை வாய்ப்பு
ஏர் இந்தியா விமான சேவை நிறுவனமானது காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.நிறுவனமானது காலியாக உள்ள Cabin crew (female) என்ற காலிப் பணியிடத்திற்கு பெண்களை பணி அமர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள பெண்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி பயன்பெறுங்கள். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் நேர்காணல் முடிய கடைசி நாள் 28.11.2023 ஆகும்.
காலிப்பணியிடங்கள்
ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் Cabin crew (female) என்ற பதவிக்கு பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாக நிறுவனமானது வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. விருப்பம் உள்ள நபர்கள் பணியை பெறலாம்.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு பாட பிரிவில் நிலங்களை பட்டம் கட்டாயம் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தற்போதைய இந்திய பாஸ்போர்ட், பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்கும் இந்தியப் பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாளர்களின் வயதானது, வேலை குறித்து அனுபவம் இல்லாத புதிதாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். வேலை அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வயதானது 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்
ஏர் இந்தியா விமான நிலையம் அறிவித்துள்ள வேலை வாய்ப்பு தேர்ச்சி பெரும் நபர்களின் சம்பளமானது அவர்களின் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப மாத சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று நிறுவனம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
ஏர் இந்தியா விமான நிலையம் அறிவித்துள்ள Cabin crew ( female ) காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாளர்களை நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது நவம்பர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளம்
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று மேலும் மேலும் வேலைவாய்ப்பு குறித்த விபரங்களை தெரிந்து கொண்டு தேவையான சான்றிதழ்களை சமர்பித்து நேர்காணலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.