செய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்வேலைவாய்ப்புகள்

Job opportunity 2023 : செவிலியர் பணிக்கு 2250 காலிப் பணியிடங்கள்; உடனே வேலை ரூ.62,000 சம்பளத்தில்

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர், துணை செவிலியர் ஆகிய பணிகளுக்கு 2250 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது . எனவே இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் தகுதியுடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் இப்பணிக்கு இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2023 ஆகும்.

காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் ஆகிய பணிகளுக்கு காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்பணிகளுக்கு 2250 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கல்வித்தகுதி

பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரத் துறை இயக்குநகரத்தால் வழங்கப்படும் இரண்டு ஆண்டு துணை செவிலியர் அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநரகத்தால் வழங்கப்படும் 18 மாத பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 1.7.2023 தேதியின்படி 18 வயது பூர்த்தி பெற்றவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

சம்பளம்

துணை செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 18,000 முதல் 62,000 வரை சம்பளம் தரப்படும்.அவரவர்களின் பதவி நிலைக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வோ அல்லது நேர்முக தேர்வோ இல்லை. .மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவீர்கள்.

விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 மற்ற அனைத்து பிரிவினர் ரூ.600செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பதாரர்கள் அனுப்ப வேண்டும் . தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள விண்ணப்பிக்க கடைசி தேதியான 31.10.2023 தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்

www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை உறுதி செய்து ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *