தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஓர் அறிய வேலைவாய்ப்பு.. யாரும் தவறவிடாதீர்கள்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்காக காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர் இந்த பணிக்கு தகுதியுடன் நபர்கள் விண்ணப்பித்து வேலைவாய்ப்பை பெற்று உங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பாக இருக்கும். காலி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2023 ஆகும்.
காலிப்பணியிடங்கள்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் அலகு சார்பில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்காக காலியாக உள்ள 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் கட்டாயம் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு , MS office தெரிந்திருக்க வேண்டும்.மக்கள் தொடர்பு திட்டங்களில் 2 ஆண்டு முன் அனுபவம் கட்டாயம் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும்.கொடுக்கப்பட்டுள்ள வயதிற்கு உட்பட்ட நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சம்பளம்
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் 12 ஆயிரம் வழங்கப்படும் என நினைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
வாட்டர் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும் பின்பு விண்ணப்பிக்க கடைசி தேதியான 25.10.23 தேதி மாலை 5.45 மணிக்குள் கீழே கொடுக்கப்படும் முகவரியில் பூர்த்தி செய்து பதிவஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்
விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முகவரி
இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர்,தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,இரண்டாவது தளம், கோரம்பள்ளம் – 628101, தூத்துக்குடி மாவட்டம்.
இந்த முகவரிக்கு பூர்த்தி செய்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் இதனை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும்.