ரூ. 399 க்கு ஜியோவின் அதிரடி திட்டம்
ஜியோ போஸ்ட்பெய்டு பிளஸ் பிளானை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் செல்லும் போது வைஃபை காலிங் வசதியை பெற முடியும். ஜியோ போஸ்ட்பெய்டு வசதியை பெற்றிருப்பவர்கள் அமெரிக்கா ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்க படாது.
தற்போது ஐந்து விதமான டேரிப் பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அன்லிமிடெட் வீடியோ கால்கள், குறுஞ்செய்திகள் உடன் ரூபாய்.399 செலுத்தினால் போதும். 200 ஜிபி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் ஜியோசான், ஜியோசினிமா, ஜியோடிவி வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்த ப்ளான் ரூபாய்.599 அன்லிமிடெட் கால்கள், குறுஞ்செய்திகள் வசதிகள் உண்டு. இத்துடன் ஜியோ போஸ்ட்பெய்டு ஃபேமிலி பிளான் படி கூடுதலாக ஒரு சிம்கார்டு கிடைக்கும். அடுத்த மூன்று பிளான்கள் முறையே ரூபாய். 799, ரூபாய்.999, ரூபாய்.1499 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூபாய்.999, ரூபாய்.1499 திட்டங்களில் 500 ஜிபி வரை பெறலாம். குறைவான மாதக் கட்டணம், சர்வதேச ரோமிங் வசதிகள், எல்லையற்ற பொழுதுபோக்கு என பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மாதந்தோறும் ரூபாய்.399 செலுத்துவதன் மூலம் இலவசமாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்கி ஹாட் ஸ்டார் ஆகிய கூடுதல் வசதிகளை பெற முடியும்.
மேலும் இந்தியாவிலேயே முதன் முறையாக விமானத்தில் செல்லும் போதும் ஜியோ செல்போனை பயன்படுத்தலாம். ஜியோ செல்போன் தொலை தொடர்பு நிறுவனம் புதிய போஸ்ட்பெய்டு திட்டங்களை இவ்வாறு அறிவித்துள்ளன. இதில் பல இலவச சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. இதுவரை யாரும் அறிவிக்காத இலவசங்களை அளித்துள்ளன.