செய்திகள்தேசியம்

நகை வியாபாரியின் கின்னஸ் சாதனை

2010 ஆம் ஆண்டு ஹால்மார்க் நகை கடையை தொடங்கிய கோட்டி ஸ்ரீகாந்த் தன் பிராண்டை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் கின்னஸ் சாதனை செய்ய திட்டமிட்டார். ஒவ்வொரு கட்டமாக மோதிரத்தை உருவாக்குவதற்கு மாதங்கள் செலவழித்துள்ளார். இப்போது பார்க்கும் அழகிய மோதிரம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழுமை அடைந்துள்ளன.

  • இந்தியாவில் பூக்களைக் கொண்டு இறைவனுக்கு வழிபாடு நடத்தும் பாரம்பரியம் இருந்து வருகின்றன.
  • பூக்கள் தூய்மையின் முக்கியத்துவத்தை குறிக்கிறது.
  • பூவைப் போன்ற அழகிய ஒற்றை மோதிரத்தை தயாரித்து கின்னஸ் சாதனை

மோதிரத்தின் முதல்கட்ட வடிவம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் தயாரானது குறிப்பிடத்தக்கது. ஒரு மோதிரத்தின் வடிவத்தை உருவாக்கியதும் ஹால்மார்க் நகை கடை குழுவினர் எத்தனை வைர கற்களை வைக்க முடியும் என கணினி வழியாக அடையாளம் கண்டனர். அடிப்படை வடிவமைப்பு பணிகளுக்கு 45 நாட்கள் உருண்டோடிவிட்டன.

பல டிசைன்கள் செய்து கடைசியாக கேமிலியா பூவின் டிசைனை தேர்ந்தெடுத்துள்ளனர். இது அனைவரையும் கவருவதாக இருப்பதாக நகைக்கடை அதிபர் கூறியுள்ளார். ஒரு பென்சில் ஓவியமாக தொடங்கிய மோதிரம் செய்யும் பணிகள் 2018 ஆம் ஆண்டு தொடங்கின.

இந்திய பண்பாட்டின் அடிப்படையில் ஒரு பூவின் வடிவத்தை தேர்ந்தெடுத்துள்ளார். ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஹால்மார்க் ஜுவல்லர்ஸ் அதிபர் ஸ்ரீகாந்த். 7801 வைரக்கற்கள் உடன் பூவைப் போன்ற அழகிய ஒற்றை மோதிரத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *