ஜெய் ஆஞ்சநேயா போற்றிப் பாட தைரியம் பிறக்கும்
அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பக்தனாக, சேவகனாக இருந்தவர் ஹனுமான். ஆஞ்சநேயரை வழிபட வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கும். ஜெய் ஆஞ்சநேயா போற்றிப் பாட தைரியம் பிறக்கும். புரட்டாசி மாதம் சனிக்கிழமை மற்றும் அனுமன் ஜெயந்தி, வாரத்தில் வருகின்ற ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் புதன்கிழமை இவரைப் போற்றிப் பாட தைரியம் பிறக்கும். துணிச்சல் வரும். சனி தோஷம் நீங்கும்.
ஆஞ்சநேயரை வழிபட வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கும்.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பக்தனாக, சேவகனாக இருந்தவர் ஹனுமான்.
புதன்கிழமை இவரைப் போற்றிப் பாட தைரியம் பிறக்கும். துணிச்சல் வரும். சனி தோஷம் நீங்கும்.
ஹனுமான் 108 போற்றி
- ஓம் அனுமனே போற்றி
- ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
- ஓம் அறக்காவலனே போற்றி
- ஓம் அவதார புருஷனே போற்றி
- ஓம் அறிஞனே போற்றி
- ஓம் அடக்கவடிவே போற்றி
- ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
- ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
- ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
- ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
- ஓம் ஆனந்த வடிவே போற்றி
- ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
- ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
- ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
- ஓம் இசை ஞானியே போற்றி
- ஓம் இறை வடிவே போற்றி
- ஓம் ஒப்பிலானே போற்றி
- ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
- ஓம் கதாயுதனே போற்றி
- ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் களங்கமிலாதவனே போற்றி
- ஓம் கர்மயோகியே போற்றி
- ஓம் கட்டறுப்பவனே போற்றி
- ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
- ஓம் கடல் தாவியவனே போற்றி
- ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
- ஓம் கீதாபாஷ்யனே போற்றி
- ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
- ஓம் கூப்பிய கரனே போற்றி
- ஓம் குறுகி நீண்டவனே போற்றி
- ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
- ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
- ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
- ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
- ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
- ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
- ஓம் சீதாராம சேவகனே போற்றி
- ஓம் சூராதி சூரனே போற்றி
- ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
- ஓம் சொல்லின் செல்வனே போற்றி
- ஓம் சூரியனின் சீடனே போற்றி
- ஓம் சோர்வில்லாதவனே போற்றி
- ஓம் சோக நாசகனே போற்றி
- ஓம் தவயோகியே போற்றி
- ஓம் தத்துவஞானியே போற்றி
- ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
- ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
- ஓம் தீதழிப்பவனே போற்றி
- ஓம் தீயும் சுடானே போற்றி
- ஓம் நரஹரியானவனே போற்றி
- ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
- ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
- ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
- ஓம் பண்டிதனே போற்றி
- ஓம் பஞ்சமுகனே போற்றி
- ஓம் பக்தி வடிவனே போற்றி
- ஓம் பக்த ரட்சகனே போற்றி
- ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
- ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
- ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
- ஓம் பயம் அறியாதவனே போற்றி
- ஓம் பகையை அழிப்பவனே போற்றி
- ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
- ஓம் பிரம்மச்சாரியே போற்றி
- ஓம் பீம சோதரனே போற்றி
- ஓம் புலனை வென்றவனே போற்றி
- ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
- ஓம் புண்ணியனே போற்றி
- ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
- ஓம் மதி மந்திரியே போற்றி
- ஓம் மனோவேகனே போற்றி
- ஓம் மாவீரனே போற்றி
- ஓம் மாருதியே போற்றி
- ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
- ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
- ஓம் மூலநட்சத்திரனே போற்றி
- ஓம் மூப்பில்லாதவனே போற்றி
- ஓம் ராமதாசனே போற்றி
- ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
- ஓம் ராமதூதனே போற்றி
- ஓம் ராம சோதரனே போற்றி
- ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
- ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
- ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
- ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
- ஓம் ராமாயண நாயகனே போற்றி
- ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
- ஓம் ராகவன் கண்மணியே போற்றி
- ஓம் ருத்ர வடிவனே போற்றி
- ஓம் லட்சியப் புருஷனே போற்றி
- ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
- ஓம் லங்கா தகனனே போற்றி
- ஓம் லங்காவை வென்றவனே போற்றி
- ஓம் வஜ்ர தேகனே போற்றி
- ஓம் வாயுகுமாரனே போற்றி
- ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
- ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
- ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
- ஓம் விளையாடும் வானரனே போற்றி
- ஓம் விஸ்வரூபனே போற்றி
- ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
- ஓம் வித்தையருள்பவனே போற்றி
- ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
- ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
- ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
- ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
- ஓம் வெற்றியளிப்பவனே போற்றி