முன்னணி நடிகர்கள் செய்யாத காரியத்தை முன்வந்து ஜெயம் ரவி செய்துள்ளார்
நாட்டில் கொரோனா மட்டும் போதாது என பல கடுமையான சம்பவங்கள் நடந்து கொண்டு வருகிறது. பூகம்பம் யானை இறப்பு திருடிய மனிதனை கட்டிவைத்து அடிப்பது என பட்டியல் அடுக்கிக்கொண்டே போக இப்பொழுது விதிமீறலால் ஏற்பட்ட பரிதாபம் சம்பவமும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நிகழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் சம்பவம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இருக்க சம்பவத்தில் மேல் நோக்க பார்வை இதோ.
சம்பவம்
சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ் என்னும் 56 வயது பெரியவர் அவருக்கு ஒரு 31 வயதுள்ள மகன் பெயர் பென்னிக்ஸ். செல்போன் கடையை கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி திறந்து வைத்திருந்ததால் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சாத்தான்குளம் போலீசார் கோவில்பட்டி சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்தனர்.
சிறையில் தந்தை மகன் இருவரும் மர்மமான முறையில் இறந்தது சமீபத்தில் பரபரப்பான செய்தியாக எல்லா இடங்களிலும் பரவி வந்தது. மக்கள் அனைவரும் கடும் கண்டனங்கள் எழுப்பி வந்துள்ளனர். விசாரணைக் கைதிகளின் உயிரிழப்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ஜெயம் ரவி
தனி ஒருவன் படத்தில் ஒரு மனிதன் நினைத்தால் சாதிக்கக் கூடிய காரியம் பல உண்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி தற்போது நிஜ வாழ்க்கையிலும் அதை ஈடுபடுத்தி உள்ளார்.
சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்திற்கு திரையுலகத்தினர் எவரும் குரல் கொடுக்காத நிலையில் ஜெயம் ரவி முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். சமூக வலைத்தளமான ட்விட்டரில் இந்த சம்பவத்தை கண்டித்து குரல் கொடுத்துள்ளார்.
ட்விட்டர்
ஜெயம் ரவி தனது ட்விட்டர் அக்கவுண்ட்
“எவரும் சட்டத்திற்கு மேல் இல்லை இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு தகுந்த நடவடிக்கை எடுத்து தர்மம் நிலை நாட்டப்பட வேண்டும்” கூறியுள்ளார்.
இவரின் இந்த செயலுக்கும் மிகவும் வரவேற்பு அளித்து மக்கள் நடிகர் ஜெயம் ரவியால் மற்ற திரையுலக நடிகர்களும் இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையை தீர விசாரிக்க கொடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புகின்றனர். இதனைத் தொடர்ந்து இயக்குனரும் முன்னணி நடிகருமான பாக்யராஜின் மகனான முன்னணி கதாநாயகன் சாந்தனு பாக்யராஜ் தன் கருத்தை கடுமையாக தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு மத்தியில் 2020 முடியுதா இல்லை இந்த அனைத்து நெகட்டிவ் விஷயங்களும் முடியுதானு ஒரு போட்டியாகவே இருக்கிறது. கடவுளே என்னதான் நடக்கப் போகுதோ.