ஜெயம் ரவியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பூமி படத்தின் பாடல் வெளியீடு
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமிக்கு இன்று பிறந்தநாள். ஜெயம் ரவியின் படம் பட்டியலில் பழையதாக இருந்தாலும் அனைவராலும் நேசிக்கக் கூடிய படம். இன்று இவரின் பிறந்த நாளையொட்டி அவரது வெளிவர வேண்டிய புது படமான பூமி படத்தின் ஒரு பாடல் வெளியானது.
ஜெயம் ரவி
10 செப்டம்பர் 1980 திருமங்கலம் மதுரையில் பிறந்தார் ரவி மோகன். 1993,1994 இரு தெலுங்கு படங்களில் குழந்தை நடிகராக நடித்தவர் ரவி மோகன். 2003ல் ஜெயம் படத்தில் கதாநாயகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகே மேடை பெயராக ஜெயம் ரவி ஆனார்.

திரைப் பின்னணி கொண்ட நடிகராக இருந்தாலும் தனக்கென்ற புது பாணியுடன் பட்டையை கிளப்பும் நடிகராக திரையுலகில் வலம் வருகிறார். இவரின் தந்தை மோகன் திரைப்பட எடிட்டர் அண்ணன் மோகன் ராஜா இயக்குனர் ஆவார்கள்.

அண்ணன் மோகன் ராஜா இயக்கி பல படங்கள் நடித்தார் ஜெயம் ரவி. இவர் அறிமுகமானதே அவருடைய அண்ணன் படத்தில் தான். குறுகிய கால கட்டத்தில் கை அளவு எண்ணிக்கையில் படங்கள் நடித்திருந்தாலும் ஒவ்வொரு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக தந்த நடிகர். 2009ல் ஆர்த்தியை திருமணம் முடித்து இவர்களுக்கு இரு மகன்கள். தன் மூத்த மகனையும் திறை உலகில் பயணிக்கத் துவங்கியுள்ளார்.

ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை, தனி ஒருவன், போகன், டிக்டிக்டிக், அடங்கமறு, கோமாளி. இந்த திரைப்பட பட்டியலை நோக்கும்பொழுது வெவ்வேறு விதமான கதாபாத்திரத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் வாழ்ந்தும் உள்ளார்.

அடுத்ததாக திரை பட்டியலில் வெளியிட காத்திருக்கும் படம் பூமி. இந்த படம் ஜெயம் ரவியின் 25-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் ஒரு பாடல் யூடியூப்பில் வெளியானது. மதன் கார்க்கி கவியில் இமான் இசையில் இமான் அனிருத் லாவண்யா இணைந்து பாடிய பாடல் ட்ரண்டிங் லிஸ்டில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மக்களின் சார்பாக ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவிக்கிறது சிலேட்குச்சி.