சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ஜவ்வரிசி லட்டு

பண்டிகையில் மிகவும் விசேஷமானது தீபாவளி. கொரோனா நேரத்தில் தீபாவளிக்கு முன்னதாகவே வீட்டில் பலகாரங்கள், இனிப்பு பதார்த்தங்கள் என்று அதிகமாக செய்து வைப்போம். கடையில் வாங்குவதை விட வீட்டில் தரமாக செய்து குழந்தைகளுக்கு கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி தான். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இனிப்பு வகையில் லட்டு அனைவருக்கும் பிடிக்கும்.

  • பண்டிகையில் மிகவும் விசேஷமானது தீபாவளி.
  • சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இனிப்பு வகையில் லட்டு அனைவருக்கும் பிடிக்கும்.
  • ஜவ்வரிசி இருந்தா இந்த லட்டு செஞ்சு பாருங்க சுவையான ஜவ்வரிசி லட்டு

ஜவ்வரிசி லட்டு

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி 200 கிராம், வேர்க்கடலை 2 தேக்கரண்டி, பொட்டுக்கடலை 3 ஸ்பூன், முந்திரி, திராட்சை கால் கப், ஏலக்காய் 2, நெய் 2 ஸ்பூன்.

செய்முறை விளக்கம்

ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பு, ஏலக்காய், வெல்லத்தை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஜவ்வரிசியை நன்கு பொரியும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பிறகு வேர்க்கடலை, பொட்டுக்கடலை வறுத்து தனியாக எடுத்து வைத்து ஆறவிடவும்.

ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து அரைத்த பொடியில் கலந்து வெல்லம் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விடவும்.

இந்த ஜவ்வரிசி கலவையை நன்கு பிசைந்து இளஞ்சூடான பதத்தில் இருக்கும் பொழுதே தேவையான அளவில் உருண்டை பிடித்து எடுத்து வைக்கும். ஒவ்வொரு உருண்டையிலும் ஒரு முந்திரி பருப்பு வைத்து மேலே அலங்கரிக்கவும். சுவையான ஜவ்வரிசி லட்டு தயார். இதை நீங்களும் தீபாவளிக்கு ட்ரை செய்து பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *