குடியரசு தினம் ஒரு பார்வை
நம் நாட்டில் சுதந்திரப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட 1950 ஆம் ஆண்டில் ஜனவரி 26 குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய தலைவர்களின் ஏகாதிபத்திய பெருமைகளை எதிரொலிக்கின்ற நாளாக சுதந்திரம் கிடைத்தது. இதே போன்று தேசியவாதத்தின் உணர்வுகளை பெருமைகளை எதிரொலிக்கின்ற நாளாக குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளை குடியரசு நாள்.
குடியரசு தினத்தில் தேசிய தலைநகரான டெல்லியில், மூவர்ணக் கொடியை இந்திய படை வீரர்களால் அணிவகுப்பு மரியாதையுடன் குடியரசுத் தலைவர் ஏற்றி வைப்பார். நாட்டில் சிறப்பாக பணியாற்றும் வீரர்களுக்கு குடியரசுத் தலைவரால் பதக்கங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் ஆளுநர் காவலர்கள் அணிவகுப்பு, மரியாதையுடன் கொடி ஏற்றி வைப்பார். வீர தீரச் செயல்புரியும் காவலருக்கு ஆளுநர் பதக்கங்களை வழங்குவார்.
குடியரசு தினம் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த மூன்றாவது ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். அரசியல் அமைப்பில் டாக்டர் அம்பேத்கர் நிர்ணய சபை வரைவுக் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். உலகில் உள்ள பல நாடுகளின் சட்டங்களை இக்குழு ஆராய்ந்து சிறந்த சட்டத்தை தேர்வு செய்து அதன் அடிப்படையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கியது.
இந்த குழு ஜனவரி 26 மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாடப்படுகிறது. மக்களாட்சி மணிமகுடமாக திகழ்கின்ற இந்த நாளில் 21 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் வாக்குரிமை அளிக்கலாம் என்றும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி இந்தியா கேட் வரை இன்றைய தினம் அணிவகுப்புகள் நடைபெறும்.