ஐயப்பனும் கோசியும் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மொழி படத்தில் பிரகாஷ்ராஜ் பிரித்விராஜ் ஜோடி பட்டி தொட்டி தோறும் அறியும். இன்று அவர் 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் ஆச்சரியமாக வித விதமான கேக்குகளுடன் இந்த தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார் பிரித்திவிராஜ்.
- 1982 அக்டோபர் 16 இல் பிறந்திருக்கிறார் பிரித்விராஜ்.
- மலையாளத் திரையுலகில் அறிமுகமானார் மற்ற திரையுலகிலும் பிரபலமானவர்.
- இவரின் பிறந்த நாளிற்கு வந்த பிரம்மாண்ட பரிசுகள்
பிரித்விராஜ்
16 அக்டோபர் 1982 பிறந்திருக்கிறார் பிருத்விராஜ் சுகுமாரன். இவரின் குடும்பம் ஒரு திரைக் குடும்பம். அப்பா அம்மா அண்ணா அண்ணி என அனைவரும் திரையுலகத்தவர்கள். பிபிசியில் பணிபுரியும் சுப்ரிய மேனனை 2011 இல் பிரித்விராஜ் திருமணம் செய்துக் கொண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை 2014இல் பிறந்தது.
மேலும் படிக்க : திரையுலகின் கபடி நாயகன் விஷ்ணு விஷாலுக்கு ஹாப்பி பர்த்டே

திரைப்பயணம்
இயக்குனர் பாசில்லால் நடிப்புத் திறனை சோதித்த பிறகு 2002 மலையாள திரையுலகில் அறிமுகமானார் பிரித்விராஜ். அதனைத் தொடர்ந்து 2005ல் தமிழிலும் 2010 தெலுங்கிலும் 2012 இந்தியிலும் தன் பயணத்தை மேற்கொண்டார்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளர் வினியோகஸ்தர் மற்றும் பின்னணி பாடகராகவும் திகழ்கிறார்.
ஆச்சரியம்
திரையுலகை பிரதிபலிக்கும் விதத்தில் கேமராக்களும் இவருடைய திரையுலக பயணத்தை பிரதிபலிக்கும் புகைப் படங்களுடன் அருமையாக வடிவமைக்கப்பட்ட கேக்.
மேலும் படிக்க : தர்மதுரை படம் எந்தப் பக்கம் போனாலும்…
தமிழ் திரையுலகம்
தமிழ் திரையுலகில் பல படங்கள் வந்து போனாலும் இவரின் மொழி திரைப்படம் இன்றும் நகைச்சுவை ததும்பும் வண்ணம் அமைந்திருக்கிறது. காவியத்தலைவன் காவிய வில்லனாக பட்டையைக் கிளப்பினார். இவர் நடித்த மலையாளப் படமான ஐயப்பனும் கோசியும் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
மலையாள திரையுலகம்
பிரித்திவிராஜ் நடிப்பில் லூசிபர் மற்றும் ஐயப்படும் கோஷ்டியும் சமீபத்திய சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். சமீபத்திய அப்டேட் வைரஸ் 2 படக்குழுவில் பிரித்திவிராஜ் சேர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
திரையுலகில் வெற்றிகரமாக பயணித்து வரும் பிரித்திவிராஜிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.